கிணத்துக்கடவில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.!!

கிணத்துக்கடவு ஆர்.எஸ். சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.


கோவை: கிணத்துக்கடவு ஆர்.எஸ். சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.

கோவை வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(49) முடிதிருத்தும் தொழிலாளியான இவருக்கு கோகிலாமணி(43) என்ற மனைவியும் 6 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மாரிமுத்து கடந்த 23ஆம் தேதி கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதிக்குச் செல்ல கிணத்துக்கடவு வந்துள்ளார். பின்னர் மாரிமுத்து அங்கிருந்த நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அரசம் பாளையம் செல்ல ஆர்.எஸ்.சாலை வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து மாரிமுத்து கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி கோகிலாமணி கொடுத்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...