அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகள் 700 பேர் விடுதலை: தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு 700-ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் அரசாணையைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.


சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காவல்துறை மானியக்கோரிக்கையின் போது, 113-வது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700-ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 10-மத்தியச் சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் அதனைச் செயல்படுத்தும் விதமாக முன் விடுதலை செய்ய ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கற்பழிப்பு, தீவிரவாதம், மத மோதல், ஜாதி மோதல், அரசிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17- குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கைதிகள் குறித்து, முறையாக ஆய்வு செய்து வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அந்த வழிகாட்டுதல்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, 700-குற்றவாளிகளை விடுவிக்க 17 விதிமுறைகளை வகுத்து இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி தமிழகம் முழுவதும் உள்ள மத்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் கைதிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நன்னடத்தை மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் 700 கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...