கோவையில் கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை..!

வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து, வாரம் ஒரு நாள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்க ஊதியத்தை, அரசு அறிவித்தபடி உடனடியாக விடுவிக்க, கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் கிராம சுகாதாரம், பகுதி சுகாதாரம், சமுதாய சுகாதாரம் என்ற பிரிவுகளில், 350க்கும் மேற்பட்ட செவிலியர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கிராமப்புறங்களிலுள்ள தாய்-சேய் நலப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், அறிவித்த ஊக்க ஊதியத்தை வழங்க கிராம சுகாதார செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, கோவை மாவட்ட கிராம, பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் செயலாளர் லில்லி கூறுகையில், ''வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்த்து, வாரம் ஒரு நாள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும். பணி நேரம் காலை, 9 முதல் மாலை 4 மணி என வரையறை செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு 2021 ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான, 15,000 ரூபாய் ஊக்க ஊதியத்தை, உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...