அதேபோல, நாளை மாலை 6 மணிக்கு போலீஸ் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 2 நாட்கள் பள்ளி ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தியை போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி குலசேகரன் அனுமதி அளித்துள்ளார்.
இந்த வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் அனுமதி கோரி மனு தாக்கல் செய்த நிலையில், 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின், விசாரணைக்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.
போலீஸ் காவலில் இருக்கும் போது மீதூன் சக்கரவர்த்தியை 3 முறை வழக்கறிஞர் பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாளை மாலை 6 மணிக்கு போலீஸ் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.