மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தை முடுக்கிவிட்டு நெறிப்படுத்த சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமருக்கு கடிதம்.!!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக, சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


கோவை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக, சிட்டிசன்ஸ் வாய்ஸ் பிரதமர் நரோந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் பிரதமர் நரோந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கட்டணங்களை உயர்த்துகின்றன. சமீபகாலமாகப் பல நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நுகர்வோரை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன.

ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்கள் வியாபாரம் இல்லாததால், அவற்றின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் எதிர்பாராத விதமாக மொபைல் போன்களின் விற்பனை 60 முதல் 65% வரை அதிகரித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் (IT sector)வரை ஸ்மார்ட் போன்களின் கூடுதல் பயன்பாட்டினால், தொலைத் தொடர்பு சாதனமாக விற்பனையும் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, நிறுவனங்களின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல.

கைபேசி ஆபரேட்டர்களின் தொடர்ச்சியான இழப்பிற்கு முக்கிய காரணம் ஆடம்பர செலவு குறைப்பு வழிகளை பின்பற்றவில்லை. மத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ஒன்று-சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்து நிறுவனங்களின் விளம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தச் செய்தது.

அதேபோல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் செலவுக் கட்டுப்பாடு அவர்களின் விளம்பரம் மற்றும் சந்தை படுத்துவதில் செலவுகளைக் குறைக்கும் நெறி முறைகளைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் அவசியம். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தை முடுக்கிவிட்டு நெறிப்படுத்தப் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...