கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை: தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது.!!

கோவை அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணகுமார் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. இதனிடையே மாணவியை சரவணகுமார் திருமண ஆசை காட்டி தனியாக அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். எதையும் வெளியே சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டினார். மேலும் அடிக்கடி மாணவியை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

இதனால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அங்குள்ள கழிப்பறைக்கு சென்று பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் அவரிடம் எதற்காக தற்கொலை செய்ய முயன்றாய் என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சரவணகுமார் அடிக்கடி தன்னை அழைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...