கோவை அருகே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி.!!

கோவை அருகே மொபட்டில் வேலைக்குச் சென்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே மொபட்டில் வேலைக்குச் சென்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை அருகே உள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தின சாமி. இவரது மனைவி சவிதா (வயது 40). டைபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை இவர் வழக்கம் போல் வேலைக்குச் செல்வதற்காகத் தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் மதுக்கரை ரோட்டில் சென்றபோது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மொபட் மீது உரசியுள்ளது.

இதில் சவிதா நிலைதடுமாறி மொபட்டில் இருந்து நடுரோட்டில் விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சவிதா சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...