பொள்ளாச்சியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவரின் மனைவி சிவசங்கரி கருவுற்ற நாள் முதல் பிரசவம் வரை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார்.

மேலும், அங்குள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளையும் ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு, சிவசங்கரி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை, அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், பிறந்த குழந்தையின் மூளை நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு குழந்தையையும், தாயையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்ததையடுத்து, குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால், அப்பெண்ணின் உறவினர்கள் சிகிச்சையளித்த அனுமதிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் இருந்து மயக்க நிலையில் வெளியேற்றியதாக குற்றம் சாட்டினர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...