கோத்தகிரியில் மருத்துவமனைக்குள் புகுந்த கரடி; நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த கரடியை பார்த்து, சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் ஒரு கரடி புகுந்தது.



மருத்துவமனையில் உலா வந்த கரடியை பார்த்த அங்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.



அவர்களின், கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.

இந்த நிலையில், நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்ததால் மீண்டும் பரபரப்பு நிலவியது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...