கோவையில் 32-மற்றும் 37-வது வார்டில் மழை நீர் வடிகாலை சீரமைக்க கோரிக்கை.!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32-மற்றும் 37-வது வார்டில் உள்ள மழைநீர் வடிகாலைச் சீரமைத்துத் தரக்கோரி பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32 மற்றும் 37வது வார்டில் உள்ள மழைநீர் வடிகாலைச் சீரமைத்துத் தரக்கோரி பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி 32 வது வார்டுக்குட்பட்ட உதயா நகர், நேதாஜி நகர், சக்தி விநாயகர் நகர், சின்னையா நகர், ஜீவா நகர், ஆசிரியர் கானனி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது.

மழை நீர் வடிகால் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதே போல் 37வது வார்டுக்குட்பட்ட டைடல் பார்க் ரயில்வே கேட் முதல் அவினாசி சாலை வரை உள்ள மழைநீர் வடிகாலில் மண் சேர்ந்துள்ளது.

எனவே இப்பகுதிகளில் மழைநீர் வடிகாலைச் சீரமைக்கத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...