திமுக என்றால் ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி-ஜே.பி.நட்டா விமர்சனம்

திமுக என்றால் ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி திமுக என்று திருப்பூரில் நடந்த பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.


திருப்பூர்: திமுக என்றால் ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி திமுக. என்று திருப்பூரில் நடந்த பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

வீரவேல், வெற்றி வேல் கோஷத்துடன் தனது உரையைத் துவக்கி உள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பேசினார்.

தொடர்ந்து பா.ஜ.க.,தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது:- அண்ணாமலை எனர்ஜிடிக் தலைவர் உயர்ந்த கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு. தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் என சுதந்திர போராட்டத்தில் பலர் தமிழகத்திலிருந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிர் நீத்துள்ளனர்.



அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் தனது வணக்கங்கள். திமுகவின் நடவடிக்கை குறித்துப் பேசினீர்கள். திமுக என்றால் ஊழல், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுக. குடும்ப கட்சிக்கு எதிரான ஒரே நம்பிக்கை பாஜக பெரும்பாலான மாநிலங்களில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது.

அதற்கு எதிரானது பாஜக. விபூதி, ஆசீர்வாதம் பெறக்கூடாது என திக சொல்கிறது. ஆனால் வெற்றிவேல் அதனை முறியடித்தது. பாஜக ஜனநாயக கட்சி, தமிழ் கலாச்சாரம் உலக அரங்கில் உள்ளது. உலக அரசியலில் இந்தியா உயர்ந்து நிற்கிறது. 1.3 பில்லியன் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றப் பிரதமர் போராடி வருகிறார்.

மோடியை எதிர்ப்பவர்கள் தேசத்தை எதிர்க்கிறார்கள். ஏழை எளிய மக்கள் கொரோனா காலத்தில் பாதிக்கப்படக் கூடாது என பிரதமர் பாடுபடுகிறார். தமிழக பாஜக தலைவர்கள் விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யுங்கள், ஏராளமான வசதிகள் விவசாய துறைக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.11 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. பாஜக தொண்டர்கள் கொரோனா காலத்தில் கடுமையாகப் போராடி உள்ளனர். எந்த ஒரு மனிதனையும் பசியோடு உறங்க விடவில்லை, மருந்தில்லாமல் உறங்க விடவில்லை கடுமையாக பாஜகவினர் பணியாற்றி உள்ளனர்.

ஆனால் கொரோனா காலத்தில் திமுக தனிமைப் படுத்திக் கொண்டுள்ளது. கணினி முன்பு அமர்ந்து கொண்டுள்ளது. முன்பு கருணாநிதி வெள்ள தண்ணீரில் நின்று போஸ் கொடுத்தார். தற்போது ஸ்டாலின் வெள்ளத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நீங்கள் பாக்கியசாலி அதனால் தான் பாஜகவில் உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...