கொடநாடு வழக்கு தொடர்பாக இன்று கோவை பி.ஆர்.எஸ் காவலர் மைதான வளாகத்தில் விசாரணைக்காக தனபாலின் ஓட்டுனர் காவக்குமரன் நேரில் ஆஜரானார். இது தொடர்பாகத் காவல்துறையினர் காவக்குமரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கொடநாடு வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தனபாலின் ஓட்டுனர் கோவையில் விசாரணைக்காக ஆஜர் ஆனார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக சயான் மற்றும் மனோஜ், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 25ஆம் தேதி சேலத்தில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டதோடு 10 மற்றும் 11வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பாகத் தனிப்படை போலீசார் தனபாலின் ஓட்டுனர் காவக்குமரனுக்குச் சம்மன் அனுப்பினர்.
இந்தநிலையில் இன்று கோவை பி.ஆர்.எஸ் காவலர் மைதான வளாகத்தில் விசாரணைக்காகக் காவக்குமரன் நேரில் ஆஜரானார்.
மேலும் இது தொடர்பாகத் தொடர்ந்து காவல்துறையினர் காவக்குமரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.