கோவையில் 13-வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தல்.!!

கிணத்துக்கடவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 13-வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 27-வயதான ஆட்டோ டிரைவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியைக் கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கிணத்துக்கடவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த மாணவி கடந்த 21-ம் தேதி காலை அவரது வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அந்த மாணவியின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த சிறுமியுடன் ஒரு வாலிபர் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் நிற்பதைக் கண்ட அந்த சிறுமியின் தந்தை இருவரையும் அழைத்து கிணத்துக்கடவு காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவந்தனர்.

பின்னர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அந்த மாணவியை கிணத்துக்கடவு பகுதி சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான 27 வயதான சேகர் என்ற வாலிபர் திருமணம் செய்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றதாகக் கூறினார் இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...