வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள் பள்ளி சத்துணவு மையங்கள் மளிகை கடைகள் என்று உணவு தேடி அலைந்து கட்டிட சுவரை இடித்து உணவுப் பொருட்களை சாப்பிட்டு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் ஒரு வாரகாலமாக சுற்றித்திரியும் 8 காட்டுயானைகள் அப்பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் உறுளிகள் எஸ்டேட் 2வது பிரிவில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த 8 காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள தமிழரசி, அருண், கபீர் போன்றவர்களின் வீடுகளை ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியது.



மேலும், மேரி என்பவரின் வீட்டின் பின்பக்க சுவரை இடித்து ஜன்னல் கதவுகளை உடைத்தது. உள்ளே இருந்த மேரி மற்றும் அவர்களின் சகோதரி இருவரும் நூலிழையில் உயிர் தப்பினர். வீட்டினுள் அமைத்திருந்த கூரை யானை இடித்ததால் சரிந்து விழுந்து முழுமையாக சேதம் அடைந்தது.



இதனால் வீட்டில் இருந்த கட்டில் டிவி பீரோ மற்றும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து மேரி மற்றும் அவரது தங்கை இருவரும் வீட்டின் பின்புற வழியாக தப்பித்து அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று உயிர் தப்பினர்.



இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகள் குடியிருப்புக்கள் வருவது தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கும் வனவிலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...