ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு..!

மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சம்மனை ரத்து செய்யக் கோரி ஈஷா மையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை எதிர்க்கும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...