திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழா - ஜே.பி.நட்டா வருகை..!

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.



திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. மாலை 3 மணி அளவில் இந்த அலுவலக திறப்பு விழா நடைபெறுகிறது.

இதனையடுத்து, இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்பட அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.



மேலும், இந்த விழாவுக்காக திருப்பூர் பல்லடம் ரோட்டில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான தட்டி போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.



முன்னதாக திருப்பூர் லட்சுமி கல்யாண மண்டபத்தில் அந்தக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெறுகிறது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...