கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர் கொலை: அண்ணன் தம்பி உட்பட 3-பேர் கைது.!!

கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவரைக் கொலை செய்த அண்ணன் தம்பி உட்பட 3-பேர் கைது செய்யப்பட்டநிலையில், தலைமறைவாக உள்ள 3-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவரைக் கொலை செய்த அண்ணன் தம்பி உட்பட 3-பேர் கைது செய்யப்பட்டநிலையில், தலைமறைவாக உள்ள 3-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன் வயது 47, வெடிகுண்டு வழக்கில் 47 -வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறையிலிருந்து வெளியே வந்து சேக் பக்ருதீன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவர் மீது கோவை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் நேற்று ஆட்டோவில் போத்தனூர் சாரதாமில் அருகேயுள்ள மட்டன் கடைக்கு ஆடு விற்பனைக்காகக் கொண்டு சென்றார்.

சுலைமான் என்பவர் ஆட்டை திருடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இதை அறிந்த அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த ஆடு திருடப்பட்டது என கூறி ஷேக் பக்ருதீன் னிடம் தகராற்றில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது ஆத்திரத்தில் 6 பேரும் சேர்ந்து சேர்க்கை சரமாரியாகத் தாக்கினர் கட்டையால் அடித்து அதில் அவருக்கு மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி மயக்கமடைந்தார் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள ஷேக் பக்ருதியின் மனைவி ஜீனத் நிஷாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர் சிலரது உதவியுடன் கணவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரை தாக்கியது. போத்தனூர் என். பி.டரியை சேர்ந்த சுலைமான் மகன்கள் அபுதாஹீர் 28, முகமது மஜீத் 24, மற்றும் முகமது அலி 24. அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்தது.

இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தன இந்த நிலையில் சேக் பக்ரூதின் தாக்கி அபுதாகிர், முகம்மது மஜித், முகம்மது அலி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...