வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூருவிலிருந்த கணவரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் ஐ.டி.பெண் ஊழியரை வரதட்சணை கொடுமை செய்த கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி குறிச்சி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் வயது 45, இவரது மனைவி கீர்த்தி 38, இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் குழு தலைவராக வேலை செய்து வருகிறார். கீர்த்தி துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார்.
அதில் கூறியிருந்ததாவது:- எனக்கும் செந்தில் குமாருக்கும் 2008-ஆம் ஆண்டு சூலூரில் திருமணம் நடந்தது பெற்றோர்கள் அவருக்கு 64 பவுன் நகை 1 லட்சம் பணத்தை வளர்ச்சியாகக் கொடுத்தனர். எனது கணவர் பெங்களூரு மற்றும் கோவையில் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நான் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குகிறேன் எனது கணவர் வியாபாரத்திற்காக அடிக்கடி பணம் வாங்குவார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் எனது கணவருக்குத் தொடர்பு இருப்பது எனக்குத் தெரியவந்தது.
இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அது மேலும் அடிக்கடி பணம் கேட்டு கணவர் குடும்பத்தினர் தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் கணவரின் அம்மா மருத்துவச் செலவிற்கு என பெற்றோர்களிடம் ரூபாய் 4 லட்சம் வாங்கினார்.
வியாபாரத்திற்கு ரூபாய் 6 லட்சம் வாங்கினார். கூடுதலாகப் பணம் கேட்கும் போது கொடுக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று விரட்டுவார்கள். மேலும் எனது நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 10 லட்சத்துக்குக் கணவர் கார் வாங்கினார் பணம் கேட்டு அடிக்கடி துன்புறுத்துவதாக மாறுதலாகி தொப்பம்பட்டி வீட்டிற்கு வந்துவிட்டேன்.
அங்கு வந்ததும் எனது கணவர் செந்தில்குமார், அவரது அம்மா விஜயலட்சுமி, மகள் புவனேஸ்வரி, அவரது கணவர் கோபால், மகள் வெங்கடலட்சுமி மற்றும் சங்கீதா (எ) சர்மிளா ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து பணம் கேட்டு என்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி விட்டு துடியலூர் போலீசார் வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூருவிலிருந்த தொழிலதிபர் செந்தில்குமாரைக் கைது செய்த நீதிபதி முன் ஆஜர் படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர்.