கோவையில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு; பருவ மழையால் வைரல் காய்ச்சல் அதிகரிப்பு

கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது., அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



கோவை: கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், பருவமழை காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு, 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்டோர் வைரல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் வருவதை எளிமையாக தடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். வீட்டை சுற்றியுள்ள பழைய பொருட்கள், சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் கொட்டாசிகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாத்துக் கொண்டால், டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...