கோவையில் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில் பல்லி..!! முதியவர் அதிர்ச்சி!

சம்பவம் குறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரியிடம் புகார் செய்யப் போவதாக 84 வயது முதியவர் தெரிவித்தார்.


கோவை: கோவையை சேர்ந்த 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், காய்ச்சல் காரணமாக கடையில் வாங்கிய பிரிட்டானியா ரஸ்க் (Britannia Rusk) பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

கோவை கணபதி, வெங்கடேசபுரம், 3-வது தெரு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (84), இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடையில் பிரிட்டானிய ரஸ்க்கு பாக்கெட் வாங்கி பாலில் தொட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பாக்கெட் தீரும் நிலையில் இருந்ததால், பாக்கெட்டை கொட்டி அதிலிருந்த ரஸ்கை எடுத்துள்ளார். அப்பொழுது, பாக்கெட்டின் உள்ளே இறந்த நிலையில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான கிருஷ்ணசாமி, கம்பனியில் ரஸ்கை தயாரிக்கும் போதே, இந்த பல்லி உள்ளே இருந்து இறந்து போய் இருக்கலாம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், என் வீட்டில் இரண்டு பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். காய்ச்சல் உள்ளபோது வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடிய மிக அவசியமான உணவு பொருளாகும்.

இதை எங்களுடைய பேரப்பிள்ளைகள், குழந்தைகள் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது என வருத்தம் தெரிவித்தார். மேலும், உடனடியாக இதுகுறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி இடமும் புகார் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...