சென்னை வெள்ளத்தின் போது தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்து மக்களிடையே நம்பிக்கை ஊட்டிய முதலமைச்சரின் அரசும், அரசின் நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்கின்றது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கோவையில் அரசின் சார்பில் மக்கள் நல திட்டங்களைத் துவக்கி வைத்து முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் வாழ்த்துரை வழங்கி பேசினார்.
இதில், தாய், தந்தையைப் போல நடை, உடை, பாவனை மற்றும் குணநலன்களில் மகனுக்கு ஒற்றுமை இருக்கும். ஆனால் கலைஞர் கருணாநிதியைப் போலவே சிந்தனையில் ஒற்றுமை கொண்டவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கலைஞர் கருணாநிதி எங்கு வேண்டுமானாலும் நடத்தி இருக்கலாம், ஆனால் கோவையில் நடத்தி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதைப்போலவே கொரோனா பேரிடர் காலகட்டத்திற்குப் பிறகு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முதலமைச்சர் நடத்தியிருக்கிறார். இதற்காக அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
மிகப்பெரிய மழை வெள்ளம் மற்றும் கொரோனா பேரிடர் பாதிப்புகளை முறியடித்த முதலமைச்சர், கோவைக்கு இரண்டு முறை வருகை தந்து கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன், மருத்துவர்களுடைய ஆலோசனை பெற்றுக் கொண்டு அவர்களது பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளின் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இது நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஊட்டியது. அதேபோல சென்னை வெள்ளத்தின் போது தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்து மக்களிடையே நம்பிக்கை ஊட்டிய முதலமைச்சரின் அரசும், அரசின் நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்கின்றது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுள்ளார். அதனை அனைவரும் இணைந்து முதல்நாளிலேயே அமலாக்க வாக்குறுதி அளிக்கிறேன் என்றார்.