கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..!

ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனையிட்ட போது ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.62 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையிலிருந்து சார்ஜாவுக்கு வெளிநாட்டு கரன்சிகள் கடத்த முயற்சி நடப்பதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு ஏர் அரேபியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோகுலகோடீஸ்வரன் (27) மீது சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

சோதனையில் அவரது உடமைகள் மற்றும் ஆடைகளில், ரூ.26.62 லட்சம் மதிப்பிலான, சவுதி அரேபியாவின் ரியால், ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் தினார், அமெரிக்க டாலர்கள் ஆகிய வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கோகுல கோடீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...