'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' - கோவையில் முதல்வர் தலைமையில் மாநாடு; புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், குறிப்பாக, ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.


கோவை: முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், முத்ல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை துவங்கியது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. குறிப்பாக இந்த மாநாட்டில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம், 74,835 நபர்களுக்குவேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்படுகின்றது. 485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம் 1960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது. இது தவிர, 13 ஆயிரத்து 413 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் 11681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கபடுகின்றது.



மேலும், பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலி, தமிழ்நாடு நிதி நுட்பகொள்கை 2021 ஆகியவையும் இன்றைய நிகழ்ச்சியில் முதல்வர்வெளியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...