நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கிணத்துக்கடவு அண்ணாநகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ., செ. தாமோதரன் தெரிவித்தார்.


கோவை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கிணத்துக்கடவு அண்ணாநகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் உள்ள அதிமுக நகர செயலாளர் கே.என்.மூர்த்தி இல்லத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு அதிமுக அவைத்தலைவர் சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், விவசாய அணி மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் கே.என். மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செ. தாமோதரன் கலந்து கொண்டு பேசியபோது, விரைவில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்றும், அதற்காக அதிமுகவினர் தீவிர செயலாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் ஆதிமுக நிர்வாகிகளான டி.எல்.சிங், மனோகரன், பிரபு, கண்ணம்மாள், லட்சுமணன், தங்கராஜ், கார்த்தி, தண்டபாணி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...