திருப்பூரில் அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஏற்றுமதியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்

அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல் ஏற்றுமதியாளர் டாலர் பாலு உள்ளிட்ட இருபத்தி ஒன்பது பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களிடம் கலந்துரையாடினார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல் ஏற்றுமதியாளர் டாலர் பாலு உள்ளிட்ட இருபத்தி ஒன்பது பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மே 7ஆம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் ஒரு விடிவெள்ளி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பதவியேற்ற இரண்டு மாதங்களில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தி அதில் சுமார் 28 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் 40 திட்டங்களும் 83 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் கொண்டுவந்த முதல்வரின் சீரிய செயல்பாட்டிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் லட்சியமும் அதே போல் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையின் சிறப்பம்சமாக 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நன்றி தெரிவித்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழகத்துக்கு என்று ஒரு தனி ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையினை தாங்கள் பதவியேற்ற மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு அன்பரசன் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...