ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3-பேர் கைது.!!

ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து, 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


நீலகிரி: ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கிய நபரிடம் இருந்த பணத்தைச் சோதனை செய்யக் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனியிடம் கொடுத்து சோதனை செய்தனர். அந்த பணம் கள்ளநோட்டு என உறுதி செய்யப்பட்டது. ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி புகார் தெரிவித்தார்.



இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ராஜாராம் மேற்கொண்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், 32, அவரது கூட்டாளி பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோபிநாத், 25, ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 28, இவர்கள் மூலம் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இவர்களிடம் மேற்கொண்ட சோதனையில், 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...