Exclusive: கோவையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் முதலீட்டு மாநாட்டில் குறுந்தொழில் அமைப்புகள் புறக்கணிப்பு: தொழில்துறையினர் அதிருப்தி..!

கோவையில் நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலீட்டு மாநாடு மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு குறுந்தொழில் அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது - கோவை தொழில்துறையினர் அதிருப்தி.



கோவை: இரண்டு நாள் பயணமாக கோவைக்கு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று வ. உ.சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பல்வேறு புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.

இந்த நிலையில், கோவையில் நாளை முதல்வர் பங்கேற்கும் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு, குறுந்தொழில் அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, கோவை தொழில் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாளை, (நவம்பர் 23) அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு முதலீட்டு மாநாடு மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கோவையிலுள்ள குறுந்தொழில் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்து கோரிக்கை விடுத்த போதிலும் எந்த பதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இல்லாததால் தொழில் துறையினர் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, கோவையில் உள்ள தொழில் துறையினர் சிலர் கூறியதாவது, "தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியில் சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த ஐந்து அல்லது ஆறு தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தொழில் அமைப்புகள் அதிகபட்சமாக 10 நபர்களை மட்டுமே அழைத்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள குறுந்தொழில் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கோவை குறுந்தொழில் அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தொழில் அமைப்புகளின் விபரப்பட்டியல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் தொழில் துறையினரின் முக்கிய நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த குறுந்தொழில் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தராதது மிகுந்த வருத்தமளிக்கிறது", என்றனர்.

குறுந்தொழில் அமைப்புகள் பங்கேற்காதது முதல்வருக்கு தெரியுமா? அல்லது அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? இப்பிரச்சினை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடந்த தொழில் துறை சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கோவையில் உள்ள குறுந் தொழில் அமைப்புகளுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் தற்போதைய முதல்வர், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலும் அவர் நடத்திய நிகழ்ச்சியில் தைரியமாக பங்கேற்று கோவையில் தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து இங்குள்ள குறுந்தொழில் அமைப்பினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் தொழில் நகரான கோவை மாவட்டத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவையில் உள்ள குறுந்தொழில் அமைப்பினருக்கு அழைப்பு வழங்கப்படாதது மற்றும். 5 அல்லது 6 தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், அதிருப்தியும் அளிப்பதாக பல்வேறு தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவையில் உள்ள தொழில் அமைப்புகளுக்கே அழைப்பு இல்லாத சூழ்நிலையில், கோவையில் இது போன்ற நிகழ்ச்சிகள் எதற்காக நடத்தப்படுகிறது? இதற்கு சென்னையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம்.

கோவை தொழில் துறையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் அனைத்து தொழில் அமைப்புகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்", இவ்வாறு தொழில் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...