பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்: கோவையில் போலீசார் விழிப்புணர்வு.!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தெரிவித்திடக் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் தாமோதரன் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (22.11.2021) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், சக மாணவ மாணவிகளிடையே ராக்கிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள், குற்றங்களைத் தடுப்பது பற்றியும், போக்சோ, சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலை விதிகளைப் பின்பற்றுவது பற்றியும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், கொரோனா பரவும் தீவிரம் பற்றியும், மன அழுத்தமா? போதைக்கு அடிமையா? குடும்பப் பிரச்சனையா? கவலை வேண்டாம் உடனே அழைத்திடுங்கள் விடியலை-0422-2300999 என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.



பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தெரிவித்திடக் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...