கோவையில் ரூ.441.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. ரூ.441.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌.


கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் ரூ.89.73 கோடி மதிப்பிலான முடிந்த 128 பணிகளைத் திறந்து வைத்தார். ரூ.596.02 கோடி மதிப்பில் புதிதாக 67 பணிகளைத் துவக்கி வைத்தார்.



மேலும் ரூ.441.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23,534 பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்‌.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான வெற்றி நிலையில், கோவையில் வெற்றி வாய்ப்பை பெறவில்லை. வெற்றி வாய்ப்பை தவற விட்ட மாவட்டமாக இருந்தாலும், மாபெரும் மக்கள் சபை இங்கு தான் நடத்தப்படுகின்றது.



செந்தில் பாலாஜியைப் பொறுப்பாக நியமித்து இருக்கிறேன். அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள்தான் என இந்த அரசு செயல்படுகின்றது. திமுக அரசைப் பொறுத்த வரை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டது.

ஆட்சி அமைந்த அன்றே இதற்கு தனித்துறை அமைக்கப்பட்டது. இப்போதும் பலர் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர். பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும்.

புதிய திட்டங்களை விட, தனி மனிதனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது தான் முக்கியம். ஏராளமான திட்டங்களைத் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்‌‌ மாநகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராகக் குடிநீர் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் திட்ட சாலைகள் போடப்படவில்லை.

5 திட்ட சாலைகளை அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கும் சிறைச்சாலை நகரின் வெளிப்பகுதிக்குக் கொண்டு செல்லப்படும்.

கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கு அடித்தளமாக இருக்கும் மாவட்டம் கோவை. இது போன்ற தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் முதல் தொழில் மாநிலமாகத் தமிழகம் இருக்க வேண்டும்.

நாளை தொழில் முதலீடு மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவையாக இருக்கும். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். செயலில் எனது பணி இருக்கும்‌. அனைத்திலும் தலை சிறந்த மாவட்டமாகக் கோவை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...