தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தவிப்பு: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!!

தொழிலாளர் நலத்துறை அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தவித்து வருவதால், முதலமைச்சர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: தொழிலாளர் நலத்துறை அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தவித்து வருவதால், தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், கடந்த 2016 முதல் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், நல வாரியம் சார்பில் வழங்கப்படும். பல்வேறு உதவிகளை பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சார தொழிலாளர் முன்னேற்ற சங்க, பொதுச்செயலாளர், G.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமான அமைப்புச்சார தொழிலாளர் சங்கம் 1002/ கோவை, தொ.மு.ச. பேரவையுடன் இனணக்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களுக்கு தொழிற்சங்கத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள்.

கடந்த 2016-லிருந்து நல வாரியத் தொழிலாளர்கள் நலத்திட்டத்திற்கு விண்ணபித்த உறுப்பினர்களின் ஒய்வூதியம், 60 வயது பூர்த்தியானது முதலும் குடும்ப ஒய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்தில் ஊனமுற்றாலோ அல்லது இயற்கையின் உபதையால் ஊனமுற்றாலோ ஒய்வூதியம் கட்டாயமாக காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமானம், ஆட்டோ நல வாரியத்தில் அதிகளவு நிதியும் வருவாயும் இருப்பதைப் போல் அமைப்புச்சாரத் தொழிலாளர்களுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி நிரந்தரமாக அவர்களும் தங்குதடையின்றி வாழ்வுரிமையை பெற்றிட நடவடிக்கை மேற்க்கொள்ள தொழிலாளர்களின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டுச் சட்டம் 1994 தமிழ்நாடு கட்டுமான வாரியம் மற்றும் 1999 ம் ஆண்டு அமைப்புசார வாரியத்திற்கு நலத்திட்டத்தை அறிவித்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பலனடைந்து வந்தாலும் இந்த திட்டத்தில் புதுபிக்கவில்லை என்று காரணம்காட்டி நலத்திட்ட உதவிகளையும் வாரிய பதிவையும் இழந்தவர்களே அதிகம். இதைவிட கடந்த ஐந்து ஆண்டுகளகா பதிவு புதுப்பித்தல் மற்றும் திட்டத்தை பெறுவதற்க்காக தொழிலாளர்கள் பலமுறை அலைந்து தங்களது உழைப்பையும் நேரத்தையும் செலவழித்து மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

எந்த நோக்கத்திற்க்காக மறைந்த தலைவர்களான முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களும் அமைப்புச்சாரத் தொழிலாளர்கள் அவர்களுடைய வாழ்வுரிமையை எளியமுறையில் பெற்றிட தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர் நல வாரியத்தை அமைத்தார்களோ அந்த நோக்கமே வீணாகி உள்ளது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், தகுதி இருந்தும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நலவாரியத்தில் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நலவாரியத்தின் மூலம் கிடைக்கும் கல்வி உதவித்தொகை, ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரின் சார்பிலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...