கோவையில் மழையினால் சாலையின் மையப் பகுதியில் ஏற்பட்ட பள்ளம்..! பொதுமக்களே மூடி அசத்தல்.!!

கோவை சிந்தாமணிப்புதுார் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஏற்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை கவனிக்காததால் பொதுமக்களே மூடியுள்ளனர்.


கோவை: கோவை சூலூர் திருச்சி ரோட்டில் விபத்துகளுக்கு காரணமான பள்ளம் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். நெடுஞ்சாலைத்துறை கவனிக்காததால் பொதுமக்களே ஒன்று சேர்ந்து பள்ளத்தை சரி செய்தனர்.

திருச்சி ரோட்டில், சிந்தாமணிப்புதுார் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து, அப்பகுதி பா.ஜ.க, நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் தனியார் நிறுவனம் உதவியுடன் அப்பள்ளத்தை மூடினர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...