வரும் 23-26 தேதிகளில் துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் 6 வயது ராணா சிவகுமார் தேர்வு. சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
கோவை: துபாயில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான பேஷன் ஷோவிற்கு, கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன், முதல் முறையாக தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கோமதி தம்பதியரின், ஆறு வயது சிறுவன் ராணா சிவக்குமார், துபாயில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த முதல் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ள ராணா, கோவை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.
துபாயில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி பற்றியும் ராணாவின் ஆர்வம் குறித்தும் பேசிய தந்தை சிவக்குமார் கூறியதாவது:-

மூன்று வயதிலிருந்தே பேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று வருகிறார். மாடலிங், விளம்பரம் மற்றும் குறும்படங்களில் நடித்தும் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மனைவியின் அழகு நிலையத்துக்கு வந்த பேஷன் டிசைனர் ஒருவர், எனது மகனைப் பார்த்துவிட்டு, ராணா பேஷன் ஷோவுக்கு ஏற்றாற்போல இருக்கிறான். ஏன் இவனை பேஷன் ஷோவுக்கு அனுப்பக்கூடாது என்று கேட்டார். ஆனால், அப்போது ராணாவுக்கு 3 வயது தான்.

இருந்தபோதும், முதல் முறையாக கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பங்கேற்ற ராணா, முதல் பரிசைப் பெற்றான். இது பெரிதும் எங்களை ஊக்குவித்தது. அப்போது முதல், மாடலிங் செய்து வரும் ராணா, தன்னைத் தானே செதுக்கிக் கொண்டான். பல வீடியோக்களையும், நேரிலும் பேஷன் ஷோக்களை பார்த்து, அவன் திறமைகளை மேம்படுத்திக் கொண்டான்.
தொடர்ந்து, பெங்களூரு, கோவை, சேலம், சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜூனியர் பேஷன் ஷோக்களில் ஆர்வமுடன், ராணா பங்கேற்றான். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, இதுவரை 15-க்கும் மேற்பட்ட மெடல்களையும், விருதுகளையும் குவித்தான்.

இதனிடையே, வரும் 23, 24, 25, 26-ம் தேதிகளில் துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா பங்கேற்கிறான். சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இதுவரை, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது எதுவே முதல் முறை. தமிழகத்தின் பாரம்பரியக் கலையான சிலம்பாட்டத்தையும் தீவிரமாக கற்று வரும் ராணா, பல்வேறு விதமான விளம்பரப் படங்களில் நடித்து வருகிறேன். ராணாவை, திரைப்பட இயக்குநர் செல்வராகவன் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், பலர் ராணாவுக்கு ஸ்பான்சர் செய்துள்ளனர்.
சர்வதேச அளவிலான போட்டியில் வென்றால், தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பான், ராணா, இவ்வாறு அவர் கூறினார்.