புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் மகாலிங்கம் (72). இவர் செல்வபுரம் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவரது மனைவி சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டார். இதையடுத்து மகாலிங்கம் வீட்டிற்குச் செல்லாமல் கடையிலேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில், மீண்டும் மறுநாள் பணி முடித்து வீட்டிற்குச் சென்ற பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், 27 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் வைர மோதிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, மகாலிங்கம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.