வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கோவை மாவட்டத்தில் 14,597 போ் விண்ணப்பம்..!

இதேபோல, நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 14 ஆயிரத்து 597 போ் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், அதற்கு மாற்றாக நவம்பா் 20, 21 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் சனிக்கிழமை 4,514 போ் விண்ணப்பம் அளித்தனர்.

இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 10 ஆயிரத்து 83 போ் விண்ணப்பம் அளித்துள்ளனர். இரண்டு நாள்களிலும் சேர்த்து 14 ஆயிரத்து 597 போ் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இதேபோல, நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...