கோவை விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க முதல்வருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு.

கோவையில் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் வருகை தரும் கோவை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற உள்ள அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த பணிகளை பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று மற்றும் நாளை கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தலைமையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சாா்பில்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி.மைதானம் வரை தலா ஒரு கிலோ மீட்டா் வீதம், 10 தொகுதிகளைச் சோந்தவா்களுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு முதல்வருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.



இதில், திமுக மாநகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக், மேற்கு மாவட்டப் பொறுப்பாளா். பையா (எ) கிருஷ்ணன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி. ஆா். ராமசந்திரன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.சேனாதிபதி, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் வரதராஜன் ஆகியோா் பங்கேற்றனர்.

கோவையில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த தமிழக முதல்வரை, ஒரு லட்சம் தொண்டா்கள் திரண்டு வரவேற்க கோவை விமான நிலையத்திலிருந்து வ. உசி மைதானம் வரை கையில் கட்சி கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.



Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...