கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது.!!

கோவை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53-வயது முதியவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 53, இவர் வீட்டுக்கு முன்பு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த முதியவர் சிறுமிகளிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்தார். மேலும் தான் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி தூக்கிச் சென்று சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி உடனடியாக சம்பவம் குறித்து சரவணம் பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தெரியவந்தது. மேலும் இது போக்சோ வழக்கு என்பதால் வழக்கு கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் ஜாகீர்உசேன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...