முக்கிய அறிவிப்பு: முதலமைச்சர் கோவை வருகை - போக்குவரத்து மாற்றம் கோவை காவல்துறை அறிவிப்பு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை தருவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை தருவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளை காலை 6:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கனரக வாகனங்கள் கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தொட்டிபாளையம் சந்திப்பு விரியம்பாளைம், கைகோலாபாளையம் வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலையில் இருந்துவரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி சாலையை அடைந்து சரவணம்பட்டி வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவஇந்தியா சாலை, ராமகிருஷ்ணா கல்லூரி, 100 அடி சாலை மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லவேண்டும்.

திருச்சி சாலையில் இருந்து வரும் பேருந்துகள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசு மருத்துவமனை, லங்காகார்னர், கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

பழைய மேம்பாலம் வழியாக அவினாசி சாலையில் வரும் வாகனங்கம் ஜேஎம் பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம் ரயில்நிலையம் வழியாக திருச்சி சாலைக்கு செல்லவேண்டும்.

அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக செல்ல அனுமதியில்லை.

மாற்று வழியாக அவினாசி சாலைக்கு செல்ல டிஐஜி அலுவலகம் வந்து ரெட்பீல்ட் வழியாக புலியகுளம் சென்று இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர்

வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

எல்.ஐ.சி சாலையில் வாகனங்கள் செல்லகூடாது. மத்தியபேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர் அவினாசி, பல்லடம் செல்லக்கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு. ஆர்.வி.ரவுண்டானா, மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி, மணிஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமிமில் சந்திப்பில் அவினாசி சாலையை அடைந்து மேற்குறிப்பிட்ட பகுதிகருக்கு செல்ல வேண்டும்.

அவினாசி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஜிகேஎம், அண்ணா சிலை, எல். ஐ. சி வழியாக வராமல் லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...