கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான தனியார் பள்ளி முதல்வரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு..!!

பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதான தனியார் பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதான தனியார் பள்ளி முதல்வரின் ஜாமின் மனு மீதான விசாரணை, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கோவையில் 17 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடந்த, 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.

மாணவி பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனிடம், 46 புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமலிருந்ததால் 'போக்சோ' வில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணை வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...