பொள்ளாச்சியில் பணிக்கு சென்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு.!!

போலீஸ் ஏட்டு வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே, பணிக்குச்செல்லும் போது, போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவு பாலாஜி நகரைச்சேர்ந்த ஜவஹர்லால் நேரு 52, பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று காலை பணிக்குச்செல்ல, வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.

இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சி போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...