பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்-கோவையின் புதிய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார்

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்தார்.


கோவை: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த தீபக் தாமோர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர், நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது அறைக்குச் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படும். அதற்காகத் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளோம்.

அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தி போலீஸ் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர முதியவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

சாலை விபத்துகளைக் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பண மோசடி, வேலை வாங்கித்தருவதாக மோசடி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

கோவையை அமைதியான மாநகரமாக வைக்க சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருட்டு சம்பவங்களைக் குறைக்க ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதிய கமிஷனரை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன் வீல்சேரில் வந்து போலீஸ் கமிஷனரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அவரிடம் போலீஸ் கமிஷனர் ஆறுதல் கூறினார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...