கோவை போத்தனூரில் ரயில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபர் கைது..!

திருடு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.


கோவை: கோவை போத்தனூரில் ரயிலில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (35) தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்தார்.

இந்த நிலையில், கோவை வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார். அப்போது, செல்போன் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உடனடியாக அவர் ரயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், திருடு போன செல்போன் எண்ணை வைத்துத் தேடி கொண்டிருந்தனர். அப்போது, செல்போன் எண்களை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், இவர் திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமார் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...