கோவையில் பல வருடங்களாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.


கோவை: பல வருடங்களாக சிறையில் உள்ள சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பின்னரும் கைதிகள் பலர் பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்படாமல் உள்ளனர். காந்தி ஜெயந்தி, அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாட்களில் கைதிகளின் நன்னடத்தை கொண்டு விடுவிக்கப்படுவது வழக்கமாக நடைபெறுகின்றது.

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளில் ஜாதி பேதமற்ற முறையில் பரிசீலித்து கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கான அரசாணை நவம்பர் 15ல் வெளியிடப்பட்டது.



இந்த அரசாணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகவும் மதசார்பற்ற நீதிமுறைகளுக்கு மாற்றாகவும் சிறுபான்மை சமூக புறக்கணிப்பு அப்பட்டமாக வெளிப்படுவது விதமாகவும் சிறுபான்மை மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஜமா இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மேற்கண்ட அரசாணையில் திருத்தம் செய்து ஜாதி, மத வழக்கு பேதமில்லாது சிறை கைதிகளை முன்விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...