8 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நியாயவிலை கடை, பள்ளி சத்துணவு மையங்களை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை: கோவை வால்பாறை அருகே நியாய விலை கடை மற்றும் பள்ளி சத்துணவு மையத்தை 8 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், நியாயவிலை கடைகள், பள்ளி சத்துணவு மையங்கள் போன்றவைகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.
இதையடுத்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல், வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே நேற்று இரவு உருளிகள் எஸ்டேட் பகுதியில் 8 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரோஜா நியாயவிலை கடையை உடைத்து, உள்ளேயிருந்த அரிசி, பருப்பு, கோதுமை போன்றவைகளை தின்று கட்டிடத்தை உடைத்து சேதப்படுத்தியது.

மேலும், அதே யானைகள் கூட்டம் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து ஜன்னல், கதவு, சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியிலிருந்து காட்டு யானைகளை விரட்டினர்.
இதனிடையே, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.