கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - வாகன உரிமையாளர் கைது..!

பேரூர் பச்சாபாளையம் அருகே ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை பேரூர் அருகே கேரளாவிற்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, சரக்கு வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பேரூர் பச்சாபாளையம், காந்தி நகர் அருகே தனியார் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் பேரூர் மற்றும் மாதம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு சரக்கு வாகனங்கள் மூலமாக இரவு நேரங்களில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது.

இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு நேற்று சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, சரக்கு வாகனத்தின் உரிமையாளர் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்துவை (42), கைது செய்தனர். மேலும், தலைமறைவான டிரைவர் முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...