கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து பா.ஜ.கவினர் உண்ணாவிரதம்..!

விலை குறைப்பு பல்வேறு மாநிலங்களிலும் அமலுக்கு வந்த சூழலில், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வராததை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பா.ஜ.கவினர் மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் விலை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த விலை குறைப்பு பல்வேறு மாநிலங்களிலும் அமலுக்கு வந்த சூழலில், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த சூழலில், தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.



அதன்படி, கோவையில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சிவானந்தாகாலனி பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பா.ஜ.க நிர்வாகிகள் மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பா.ஜ.க துணை தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக இப்போதும் மத்திய அரசு வட்டி செலுத்தி வருகிறது. இந்த சூழலில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு தற்போது விட்டுக்கொடுக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. இது பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கூட அமலுக்கு வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை.



இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...