வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெய்த கனமழைக்கு 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் தாராபுரம் 153 மில்லி மீட்டர் மழையும், குண்டடம் பகுதியில் 200 மில்லி மீட்டர் அதிகப்படியான மழையும் பதிவானது.
இதனிடையே, குண்டடம் பகுதியில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் மக்காச்சோள பயிர் பயிரிட்டு இருந்தனர். குறைந்த நாட்களில் அதிக மகசூல் தரும் பயிர் என்பதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடி செய்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பால் படிக்கும் தருவாயில் இருந்த மக்காச்சோளம் அனைத்தும் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர்.
ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை செலவு செய்து மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்த நிலையில், மழையால் முற்றிலும் சேதமடைந்தது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக வேளாண்துறை அதிகாரி பழனி குமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குண்டடம், சூரியநல்லூர், தெக்கலூர், வெங்கி பாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தற்போது ஆய்வு செய்த வரை சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மற்றும் பாதிப்படைந்ததாக தெரிவித்தார்.