கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது..!

கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது.

கோவை நகரின் முக்கியமான சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டினாலும், வாகன பெருக்கத்துக்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. நகரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும் பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால், அனைத்து பிரதான சாலைகளிலும் பாலங்கள் கட்டினாலும், சென்னையை போல் நம்மூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

முதல்கட்டமாக, நகரை சுற்றிலும், 144 கி.மீ., தூரத்துக்கு திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது. தற்போது, காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...