கோவையில் போலி வரைபடம் மூலம் பெற்ற 1.90 ஏக்கர் இடத்தின் மனைப்பிரிவு ஒப்புதல் ரத்து..!

அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலம் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததை கண்டுபிடித்தனர்.


கோவை: கோவையில் போலி வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டதாக, விளாங்குறிச்சியில் 1.90 ஏக்கர் இடத்தின் மனைப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சியில் 3.50 ஏக்கரில் மனைப்பிரிவுக்கு, நகர் ஊரமைப்பு இயக்குனர் மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மனைப்பிரிவில், பூங்கா இடத்தை போலி வரைபடம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், 1.90 ஏக்கர் பரப்பு கொண்ட மனையிடத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவை ரத்து செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர் தியாகராஜன், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு மனு அளித்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலமாக 1.90 ஏக்கர் இடத்தில் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த வீட்டுமனை ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...