பொள்ளாச்சி அருகே ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் மேல்நிலை தொட்டி மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு!

குடிபோதையில் கார் மீது மோதியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறி குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி ஜோதி நகர் சி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சித்திக் நேற்று குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து காரை ஓட்டி வந்த மதன்குமார் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்த சித்திக் திடீரென அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 70 அடி உயரமுள்ள மேல்நிலை தொட்டி மீது ஏறினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் கீழே இறங்கி வருமாறு அவரிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததையடுத்து சித்திக் கீழே இறங்கி வந்தார்.



குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுவார்கள் என்று பயந்து மேலே ஏறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆட்டோ ஓட்டுனர் மிரட்டிய சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...