கோவை மாணவி தற்கொலை விவகாரம்; பள்ளி கல்வித்துறை ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு..!

ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்.



கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆய்வை முழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவி படித்த பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை கடந்த 16-ம் தேதிக்கு முன்பே முடிந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மாணவி, சம்மந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய அதிகாரிகள், "பள்ளியில் முறையாக பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்,'' என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...